Sunday, June 2, 2024

IPL 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடுவார் தோனி! ரசிகர்களுக்கு குஷி

by Talks Tamil
0 comment 266 views

எம்எஸ் தோனி ஐபிஎல் 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம் என்ற ஊகங்கள் ஆச்சரியம் அளிக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2023 சீசனில் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார்

IPL 2023: இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி தனது டி20 லீக்கின் இறுதி சீசனில் விளையாடலாம் என்று ஊகங்கள் உள்ளன. ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்துவார், மார்ச் 31 அன்று அவரது அணிக்கும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான மோதலுடன் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்குகிறது.

ஆனால், தோனி அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியும் ஊகமாக வெளியாகியுள்ளது. சிஎஸ்கே பேட்டர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 2024 இல் தோனி விளையாடக் கூடும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) 2023ல் இந்தியா மஹாராஜாஸ் அணிக்காக விளையாடி வருகிறார்,

“அடுத்த ஆண்டும் தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாம், அவருடைய திறனும், தகுதியும் நன்றாகவே இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல்லில் அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தே, அவர் அடுத்த ஆண்டில் விளையாடுவார்” என்று புதன்கிழமை (மார்ச் 15) இரவு உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ரெய்னா தெரிவித்தார்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x