Wednesday, April 17, 2024

18 வயதில் கோடீஸ்வரர், 22 வயதில் ஜீரோ… ஆனாலும் மனம் தளராத இளைஞர்

by Talks Tamil
0 comment 283 views

8 வயதில் கோடீஸ்வரரான இளைஞர் ஒருவர் 22 வயதில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து விட்ட நிலையிலும் அவர் மனம் தளராமல் இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சிறுவயதிலிருந்தே யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பிரபலமாக இருந்தார்.

அவர் 18 வயதில் கிரிப்டோகரென்ஸி வர்த்தகம் செய்து நான்கு ஆண்டுகளில் தான் சம்பாதித்த கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களையும் இழந்தார் என்று கூறப்படுகிறது.

யூடியூப் பிரபலம் ஜெர்மனியை சேர்ந்த கியாராஷ் ஹொசைன்பூர் என்ற பிரபல யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளைஞர் கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்து மில்லியன்கணக்கில் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனார். யூடியூபில் பிரபலமாகியுள்ள அவரது ஒவ்வொரு வீடியோக்களும் அவருக்கு மிகப்பெரிய வருமானத்தை சம்பாதித்து கொடுத்தது. யூடியூப் மட்டும் இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் வருமானத்தை அவர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பெரும் தொகையை இலாபமாக பெற்றார்.

கிரிப்டோகரன்சியின் வீழ்ச்சி இந்த நிலையில் திடீரென கிரிப்டோகரன்சியின் மதிப்பு சரிய தொடங்கியபோது அவர் வாங்கி வைத்திருந்த கிரிப்டோகரன்சி படுவீழ்ச்சி அடைந்தது. அதாவது அதிகபட்ச புள்ளியிலிருந்து 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

மில்லியனரில் இருந்து ஜீரோ இளம் கோடீஸ்வரரான கியாராஷ் ஹொசைன்பூர் மிக அதிகமாக முதலீடு செய்த டெர்ரா லூனா என்ற கிரிப்டோகரன்சி கடந்த மே மாதம் 99 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. அதாவது 120 டாலராக இருந்த லூனா கிரிப்டோகரன்சி ஒரு டாலருக்கு சரிந்ததால் அவர் சம்பாதித்து வைத்திருந்த ஒட்டு மொத்த பணமும் கிட்டதட்ட ஜீரோவாகிவிட்டது.

தவறு செய்துவிட்டேன் ஒருசில நாட்களில் இந்த அபாயமான சரிவு ஏற்பட்டதையடுத்து அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் நான் தவறு செய்துவிட்டேன் என்பதை ஒப்பு கொள்கிறேன், ஆனால் எல்லா நேரத்திலும் எல்லாரும் சரியாக இருக்க முடியாது. துரதிருஷ்டவசமாக சில விஷயங்கள் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டன என்று கூறினார்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x