Tuesday, April 23, 2024

இந்த சோலார் ஜெனரேட்டர் உடனே வாங்குங்க, எலக்ட்ரிசிட்டி பில் வராது

by Talks Tamil
0 comment 263 views

Solar Generator: மின்சாரக் கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருக்க, புதிய சாதனம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சாதனம் மின்கட்டணத்தை நொடியில் பாதியாகக் குறைக்கும்.

சூரிய சக்தி: மின்கட்டனத்தை பாதியாக குறைக்கும் வழியையும் அதற்கான சாதனத்தையும் பற்றி கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு. இதனால் மின்சார கட்டணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. உண்மையில், அதிகரித்து வரும் மின் கட்டணத்தால் மக்கள் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மின்சாரக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வழி உள்ளது. அதற்கான சாதனத்தை பொருத்திவிட்டால் ஷார்ட் சர்க்யூட், மின்சாதன பொருட்கள் சேதம் உள்ளிட்ட பிரச்சனைகளும் இருக்காது. அதன்படி நீங்கள் உங்கள் வீட்டு உபகரணங்களை இந்த சாதனத்தின் உதவியுடன் இயக்கலாம்.

எஸ்ஆர் போர்ட்டபிள்ஸ் சோலார் ஜெனரேட்டர்
உண்மையில் இன்று நாங்கள் உங்களுக்கு எஸ்ஆர் போர்ட்டபிள்ஸ் சோலார் ஜெனரேட்டர் என்ற சூரிய சக்தி ஜெனரேட்டரைக் கொண்டு வந்துள்ளோம். இந்த சோலார் ஜெனரேட்டரின் உதவியுடன், உங்கள் வீட்டின் மின்விசிறி, டிவி மற்றும் பிற சாதனங்களையும் இயக்கலாம். இது மிகவும் சிறிய அளவில் இருக்கும் மற்றும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் இந்த சாதனம் பவர் பேக்அப்பை வழங்கும் திறன் கொண்டது.

இந்த சாதனத்தின் சிறப்பு என்ன?
எஸ்ஆர் போர்ட்டபிள்ஸ் சோலார் ஜெனரேட்டரின் திறன் 130 வாட் கொண்டது. அதன் மற்ற அம்சங்களைப் பற்றி நாம் பேசுகையில், அதில் 2 ஏசி கனெக்டர் போர்ட்கள், 100 வாட் ஏசி அவுட்புட், லி-அயன் பேட்டரி பேக் மற்றும் சக்திவாய்ந்த எல்இடி லைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இதை வீட்டில் மின் தடை ஏற்பட்டால் பயன்படுத்தலாம். மேலும் இதன் விலை 17,999 ரூபாய் ஆகும்.

இது சாதனம் மிகவும் சிறியது, மேலும் அதை உங்கள் பையில் வைத்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் மற்றும் உங்கள் லேப்டாப், ரேடியோ, பவர்பேங்க், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அனைத்து சிறிய சாதனங்களையும் சார்ஜ் செய்யலாம் அல்லது இயக்கலாம். அதே போல் அவசரகாலத்தில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x