Sunday, May 19, 2024

இன்று முதல் CBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, வெளியான முக்கிய தகவல்

by Talks Tamil
0 comment 270 views

CBSE 10th-12th Exam 2023: தேர்வு நேரம் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் காலை 10 மணிக்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றடைய வேண்டும்.

CBSE 10th-12th Exam 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. முதல் நாளான இன்று, 10ம் வகுப்பு ஓவிய தேர்வு நடைபெறவிருக்கிறது. அதேபோல் 12 ஆம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத்தேர்வு இன்று நடக்க உள்ளது.

இருப்பினும் 10 ஆம் வகுப்புக்கான முக்கிய பாடத் தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி துவங்குகிறது. 10 ஆம் வகுப்பின் முதல் முதன்மைத் தேர்வு ஆங்கிலம் முக்கிய பாடமாக இருக்கும். 12ஆம் வகுப்புக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், 12ம் வகுப்புக்கான ஆங்கில பாடத் தேர்வும் நடைபெறும். மேலும் இரு தரப்பு மாணவர்களுக்கும் காலை 10.30 மணிக்கு தொடங்கி, பகல் 12.30 வரை தேர்வு நடைபெறவுள்ளது. அதேபோல் சில தேர்வுகள் 1.30 மணி வரை நடத்தப்படும் என்றும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தேர்வர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மேற்கண்ட விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.

இன்று நடைபெறும் 10 ஆம் வகுப்பு ஓவியப் பாடத் தேர்வில் சுமார் 4000 மாணவ, மாணவிகள் பங்கேற்றக்க உள்ளனர். அதேபோல் 12 ஆம் வகுப்பின் தொழில்முனைவு பாடத் தேர்வில் 1643 மாணவர்கள் தோர்வு எழுத்தள்ளனர். ஒட்டுமொத்தமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மட்டும் மொத்தம் 21,86,940 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மேலும் 12ம் வகுப்பு பொறுத்தவரையில், மொத்தம் 16,96,770 பேர் தேர்வெழுதிகின்றனர்.

இந்த நிலையில் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்களும் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இன்று பரீட்சைக்கு வீட்டை விட்டு வெளியேறும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CBSE 10th-12th Exam Day Guidelines 2023: தேர்வு நாள் வழிகாட்டுதல்களை இங்கே படிக்கவும்

1. மாணவர்கள் பள்ளி சீருடை மற்றும் ஐ-கார்டு அணிந்து தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
2. மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்தை அடைய வேண்டும்.
3. தேர்வு மையத்திற்கு மாணவர்கள் அனுமதி அட்டை, பால் பேனா மற்றும் பென்சில் ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும்.
4. மொபைல் போன், கால்குலேட்டர் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற எந்த எலக்ட்ரானிக் கேஜெட்டையும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை.
5. தேர்வு நேரம் முடிந்த பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x