Saturday, May 18, 2024

IND vs BAN: டாஸில் ட்விஸ்ட்… ஷகிப் அல் ஹாசன் கிடையாது – இந்தியா மீண்டும் சேஸிங்!

IND vs BAN Toss Update: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

by Talks Tamil
0 comment 196 views

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றமில்லை.

8ஆவது வீரராக ஷர்துல் தொடர்கிறார்.

வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் இன்று விளையாடவில்லை.

IND vs BAN Toss Update, Playing XI: நடப்பு உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் லீக் போட்டி இன்று புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடப்பு தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளனர். வங்கதேச அணியும் மூன்று போட்டிகளில் விளையாடி ஆப்கானிஸ்தானிடம் மட்டுமே வெற்றி பெற்றது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது.

இருப்பினும், இன்றைய போட்டியில் வங்கதேச அணி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 40 போட்டிகளை இந்தியா – வங்கதேச அணிகள் மோதி உள்ளன. இதில் 31 போட்டிகளில் இந்தியாவும், 8 போட்டிகளில் வங்கதேசமும் வென்றுள்ளன. அதிலும் இந்திய மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது.

ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் வங்கதேசம் 3 போட்டிகளிலும், இந்தியா ஒரே ஒரு போட்டியிலுமே வென்றிருக்கிறது. இதன்மூலம், இன்றைய போட்டியில் இந்தியா (Team India) கவனமாக விளையாட வேண்டும் என கூறப்படுகிறது.

அந்த வகையில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹாசன் (Shakib Al Hasan) காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக செயல்படுகிறார். அவருக்கு பதில் நசும் அகமது உள்ள வருகிறார். மேலும், டஸ்கின் அகமதுக்கு பதில் ஹசன் மஹ்மூத் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் மாற்றம் இல்லை.

பிளேயிங் லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், சிராஜ், பும்ரா.

வங்கேதசம்: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x