Friday, May 17, 2024

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! 3 மாத நிலுவைத் தொகை குறித்து அறிவிப்பு!

by Talks Tamil
0 comment 284 views

7th Pay Commission: பிஹு பண்டிகையை கொண்டாடும் வகையில் அசாம் மாநில அரசு அதன் ஊழியர்களுக்கு மூன்று மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது, 4 சதவீதம் கூடுதலாக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.  இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் தற்போது ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42% ஆக உயர்ந்துள்ளது, இந்த தகவலை முதல்வர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.47,000 ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது.  தற்போது அசாம் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அசாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா அவரது ட்விட்டரில் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் ஜனவரி 1-ம் தேதி முதல் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அகில இந்தியப் பணி அதிகாரிகளின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவர்களின் அகவிலைப்படி 38%லிருந்து 42% ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  பிஹு பண்டிகையை கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி 3 மாதங்களுக்கு உயர்த்தப்பட்ட டிஏ வழங்கப்படும் என்று கேசவ் மஹந்த் கூறியுள்ளார்.

இதற்காக அசாம் மாநில அரசு கூடுதலாக ரூ.79.57 கோடி செலவிடப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது.  மாநில சேவை விதிகள் 2017-ன் படி, அகவிலைப்படியுடன் சேர்த்து அகவிலை நிவாரணத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  ஏப்ரல் 10ம் தேதி, பிஹு பண்டிகைக்கு முன்னதாகவே ஊழியர்களின் வங்கி கணக்கில் 3 மாத நிலுவைத் தொகை வரவு வைக்கப்படும், இதன் மூலம் ஊழியர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரையிலும் கணக்கில் பணம் வரவாகும்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x