Sunday, May 19, 2024

Smartphones: 108 மெகாபிக்சல் கேமராவுடன் மெகா ஸ்மார்ட்போன்கள்… அமேசானில் அற்புத தள்ளுபடியுடன்!

அமேசானில் 108MP கேமராவுடன் அசத்தல் தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களையும், அதன் சலுகைகளையும் இங்கு முழுமையாக காணலாம்.

by Talks Tamil
0 comment 154 views

அமேசானின் தள்ளுபடி விற்பனை சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் நோ-காஸ்ட் EMI சலுகைகளும் உள்ளன.

வங்கி சலுகைகளும் இதில் கொடுக்கப்படுகின்றன.

Amazon Sales 2023, Smartphones: அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்ற தள்ளுபடி விற்பனை சமீபத்தில் முடிவடைந்தது. அமேசானில் இந்த தள்ளுபடி விற்பனைக்கு பிறகும், பல பொருட்களுக்கு இன்னமும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில, 108MP கேமராவுடன் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல ஸ்மார்ட்போன்கள் மலிவான விலையில் அமேசானில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் நல்ல கேமரா மட்டுமின்றி பல்வேறு நல்ல சிறப்பம்சங்களுடனும் வருகின்றன.

அமேசான் தள்ளுபடி

Techno, Realme, OnePlus போன்ற பிராண்டுகளில் இருந்து இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது வங்கி தள்ளுபடி சலுகைகள் மட்டுமின்றி, எக்ஸ்சேஞ்ச் மற்றும் வட்டியில்லா மாதத்தவணை (No-Cost EMI) போன்ற சலுகைகளும் உள்ளன. அமேசானில் மலிவாகக் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து இங்கு காணலாம்.

Techno Camon 20 Premier 5G

இந்த மொபைலின் அசல் விலை 29 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். அமேசானில் இந்த மொபைலை நீங்கள் வெறும் 2,500 ரூபாய் செலுத்தி மாதத் தவணையில் வாங்கலாம். மேலும் வங்கி தள்ளுபடி சலுகையாக உங்களுக்கு 1,500 ரூபாய் குறையும். மேலும், இந்த மொபைலிலும் 108MP கேமரா உள்ளது. கூடுதலாக பின்புறத்தில் 50MP கேமரா உள்ளது. மேலும், செல்ஃபிக்கு 32MP கேமராவும் இருக்கிறது. இந்த மொபைல் MediaTek Dimensity 8050 5G பிராஸஸருடன் வருகிறது. இதில் 6.67 இன்ச் FHD+ டிஸ்ப்ளே இருக்கும். இது 5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

OnePlus Nord CE 3 Lite 5G

இந்த மொபைலின் விலை 19 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். அமேசானில் நீங்கள் மாதத்தவணையாக மாதம் 3,333 ரூபாய் செலுத்தி இந்த மொபைலை வாங்கலாம். இது தவிர, போனை வாங்கினால் 1,500 ரூபாய் வரை வங்கி தள்ளுபடி சலுகை கிடைக்கும். இந்த போன் 108MP கேமராவுடன் வருகிறது. போனின் பின்புறத்தில் மேலும் இரண்டு 2MP கேமராக்கள் இருக்கும். இது தவிர, செல்ஃபிக்காக 16MP கேமராவும் உள்ளது. இந்த மொபைலில் Qualcomm Snapdragon 695 பிராஸஸருடன் வருகிறது. இதில் 6.72 இன்ச் FHD+ டிஸ்ப்ளே இருக்கும். இது 5,000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

Realme 11 5G

இந்த மொபைலின் அசல் விலை 17 ஆயிரத்து 789 ரூபாய் ஆகும். அமேசான் மூலம் இந்த போனை 2,965 ரூபாய் செலுத்தி மாதத்தவணை முறையில் நீங்கள் வாங்கலாம். இது தவிர, இந்த மொபைலை வாங்கினால் 1,500 ரூபாய் வரை வங்கி தள்ளுபடி சலுகை கிடைக்கும். இந்த போன் 108MP கேமராவுடன் வருகிறது, கூடவே பின்புறத்தில் மற்றொரு 2MP கேமரா கிடைக்கும். மேலும்,செல்ஃபிக்காக 16MP கேமரா கிடைக்கும். இந்த மொபைல் MediaTek Dimensity 6100+ 5G பிராஸஸருடன் வருகிறது. இதில் 6.72 இன்ச் FHD+ டிஸ்ப்ளே இருக்கும். இது 5,000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x