Saturday, May 18, 2024

Watermelon Beauty: தகதகவென மின்னும் அழகுக்கு வாரத்தில ரெண்டு முறை தர்பூசணி ஜூஸ் போதும்!

Benefits Of Watermelon For Women : தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆரோக்கியமான கூறுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் நீர்சத்தை பராமரிக்கும் தர்பூசணியில் உள்ள நார்ச்சத்தும் சேர்ந்தால் பெண்களின் அழகும் ஆரோக்கியமும் மேம்படுகிறது...

by Talks Tamil
0 comment 14 views

ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவதில் பல சவால்கள் இருந்தாலும், அவற்றை நிவர்த்தி செய்ய பழங்களை உண்பது அவசியமான ஒன்றாக இருக்கும். அதில் தர்பூசணி நீர்ச்சத்து கொண்ட அற்புதமான பழமாகும். பெண்களுக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தர்பூசணியின் ஆரோக்கிய பண்புகள் இவை…

தர்பூசணி சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது, இது அனைவருக்கும் பொதுவான நன்மை என்றாலும், சரும ஆரோக்கியத்தையும், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துவதால் பெண்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வளர்சிதை மாற்றம் மற்றும் பசியை மேம்படுத்தும் வேலையையும் தர்பூசணி செய்கிறது

தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால், உடலில் இருந்து நச்சுகளை வெளியேறுவது துரிதமாகிறது. பொதுவாக பெண்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்கும். எனவே, பெண்களுக்கு தர்பூசணி அருமையான பழம் ஆகும்

தர்பூசணியில் எல்-சிட்ரூலின் (L-citrulline) உள்ளது, இது தசை வலியை நீக்குவதாகும். உடலின் செயல்திறனை மேம்படுத்தி, தசைகளை தளர வைக்கும் எல்-சிட்ரூலின் கலவை தசையில் வலி ஏற்படாமல் பாதுகாக்கிறது

தர்பூசணியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலின் ஃப்ரீ ரேடிக்கல் உருவாவதை எதிர்த்துப் போராட உதவுகிறது. புற்றுநோயை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்க்க தர்பூசணி சாப்பிடுவது உதவும்

சிட்ருலின் என்ற அமினோ அமிலம் கொண்டது தர்பூசணி. பொதுவாக, அர்ஜினைன் மற்றும் சிட்ருலின் ஆகியவை நைட்ரிக் ஆக்சைடு உற்பத்திக்கு உதவுகிறது, நைட்ரிக் ஆக்சைடு என்பது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது இதனால் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது

பெண்களுக்கு எப்போதுமே சருமம் மற்றும் முக அழகில் தனி கவனம் உண்டு. அதனால் தான், தர்பூசணி பெண்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.சரும பராமரிப்புக்காக பெண்கள் அதிகம் செலவு செய்யும் நிலையில், அதைவிட தர்பூசணி உண்பதை பழக்கமாக்கிக் கொள்ளலாம்

பெண்களின் சருமத்தை மென்மையாக்கும் தர்பூசணி பழத்தை பழமாகவும் சாப்பிடலாம் அல்லது ஜூஸாக தயாரித்தும் குடிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Tamilan Talks இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x