Saturday, May 18, 2024

Disease X என்றால் என்ன? கொரோனாவை விட மிக ஆபத்தானதா – முழு விவரம்!

by Talks Tamil
0 comment 274 views

Next Deadly Pandemic Disease X: கொரோனா தொற்றை விட அதிக உயிர்களை பலி வாங்கக்கூடிய மற்றொரு தொற்றுநோய் குறித்த எச்சரிக்கையை சமீபத்தில் WHO விடுத்திருந்தது. இதுகுறித்த முழு தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.

Next Deadly Pandemic Disease X: கோடிக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய கொடிய கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்திருக்கும் இந்நேரத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) அதைவிடக் கொடிய வைரஸ் ‘Disease X’ குறித்த எச்சரிக்கையை சமீபத்தில் விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்தார், சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த உலக சுகாதார சபை கூட்டத்தில் இந்த தொற்றுநோய் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘மற்றொரு தொற்றுநோய் எந்த நேரத்திலும் வரலாம், இது ஒரு பயங்கரமான நோயைப் பரப்பலாம் மற்றும் இது ஏராளமான மக்களைக் கொல்லக்கூடும். அதை எதிர்கொள்ள நாம் இணைந்து, தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.

அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில தொற்றுகளை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இந்த நோய்களில் எபோலா வைரஸ், மார்பர்க், மத்திய கிழக்கு சுவாச நோய், கடுமையான சுவாச நோய், கோவிட் -19, ஜிகா மற்றும் ஒருவேளை மிகவும் பயங்கரமாக உருவெடுக்கலாம் ‘Disease X’ ஆகியவை அடங்கும்.

Disease X

Disease X என்பது ஒரு நோய் அல்ல, ஒரு சொல். இது மிக மோசமான நோயாக இருக்கலாம். Disease X என்ற சொல், மனித நோய்த்தொற்றின் விளைவாக ஏற்படும் நோயை விவரிக்க, உலக சுகாதார மையத்தால் பயன்படுத்தப்படுகிறது. இது தற்போது மருத்துவ அறிவியலுக்குத் தெரியவில்லை. Disease X என்பது எதிர்காலத்தில் ஒரு பயங்கரமான தொற்றுநோயாக மாறக்கூடிய ஒரு நோயாக இருக்கலாம் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அதைப் பற்றி எந்த புரிதலும் இல்லை.

Disease X என்ற சொல் ஏன்?

கொரோனா வைரஸ் முன்பு ‘Disease X’ ஆகவும் இருந்தது. உலக சுகாதார மையம் 2018இல் முதல் முறையாக ‘Disease X’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது. பின்னர் ‘Disease X’ ஆனது Covid-19 ஆக மாற்றப்பட்டது. அடுத்த முறை ஒரு தொற்றுநோய் கண்டறியப்படும்போது இதேதான் நடக்கும், அப்போது இருக்கும் ‘Disease X’ அந்த நோயின் புதிய பெயருக்கு மாற்றப்படும்.

Disease X பற்றி விஞ்ஞானிகள் ஏன் கவலைப்படுகிறார்கள்?

வரும் காலங்களில் Disease X ஒரு கொடிய நோயாக வெளிப்படும் என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் ஏற்கனவே கூறியிருக்கிறார். எனவே மக்கள் தங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு இப்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் வந்தபோது, அதன் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை என்ற கவலையும் உள்ளது. அதேபோல, தற்போது ‘Disease X’-க்கு மருந்து எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.

வைரஸின் தன்மை?

அடுத்த Disease X ஜூனோடிக் நோயாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள், அதாவது இது காட்டு அல்லது வீட்டு விலங்குகளில் இருந்து தொற்று உருவாகும். எபோலா, எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் கோவிட்-19 ஆகியவை ஜூனோடிக் தொற்றுநோய்கள். இருப்பினும், இந்த நேரத்தில் Disease X பற்றி துல்லியமான கணிப்பு எதுவும் செய்ய முடியாது. அதே நேரத்தில், Disease X தொடர்பான சில நிபுணர்கள் அடுத்த தொற்றுநோய் ஏதேனும் வைரஸ் அல்லது பாக்டீரியாவால் பரவக்கூடும் என்று நம்புகிறார்கள். ஒரு ஆய்வகத்தில் விபத்து அல்லது உயிரியல் தாக்குதலால் Disease X ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

Disease X பற்றி என்ன செய்யலாம்?

Disease X பற்றி மக்கள் பீதி அடையத் தேவையில்லை. அதன் தொற்று பரவலை தடுக்கவும் எதிர்த்துப் போராடவும், உலகம் முழுவதிலும் இருந்து மருத்துவ நிபுணர்கள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும், ஆராய்ச்சிகளையும், கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக, கோவிட்-19 தொற்றுநோய் உலகில் அழிவை ஏற்படுத்தும் முதல் அல்லது கடைசி நோய் அல்ல என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அடுத்த தொற்று பரவலுக்கு உலகம் தயாராக வேண்டும். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் விழிப்புடன் இருப்பதும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்வதும் அவசியம்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x