Sunday, May 19, 2024

TNPSC: பொறியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

by Talks Tamil
0 comment 285 views

டிஎன்பிஎஸ்சி நடத்த இருக்கும் பொறியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எப்படி ஹால் டிக்கெட் பதிவிறக்கலாம் என்பதை பார்க்கலாம்.  

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு என்னவென்றால், விரைவில் நடத்த இருக்கும் பொறியியல் சார்நிலை பணி தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 27.05.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இதற்கான தேர்வை நடத்துகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in இணையதள பக்கத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்துக்கு சென்று, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு முகப்புப் பக்கம் (OTR DASHBOARD) வழியாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்கு விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி பதிவேற்றிய தகவல்களை வைத்து லாகின் செய்து கொள்ளலாம்.

ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

* TNPSC இணையதளதிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
* OTR டேஷ்போர்டுக்குள் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டை உள்ளீடு செய்யவும்.
* OTR லாகின் செய்த பிறகு நீங்கள் விண்ணப்பித்திருக்கும் TNPSC தேர்வுக்கான ஹால் டிக்கெட் உங்கள் டேஷ்போர்டில் காணப்படும்.
* அதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

தேர்வு எழுத செல்லும்போது மறக்காமல் ஹால்டிக்கெட்டை எடுத்துக் செல்லுங்கள்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x