Saturday, April 13, 2024

ஏகே 62 படத்திற்கு முன்பே சூடு பிடிக்கும் அஜித்தின் ஏகே 63 படத்தின் பணிகள்!

by Talks Tamil
0 comment 239 views

‘ஏகே 62’ படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் ‘ஏகே 63’ படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  

துணிவு’ படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘ஏகே 62’ படத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார்.  ஆரம்பத்தில்  ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது, அதற்கேற்ப இயக்குனரும் தனது சமூக வலைத்தளங்களில் ‘ஏகே 62’ என்று குறிப்பிட்டும் கவர் போட்டோவில் அஜித்தின் புகைப்படத்தையும் வைத்திருந்தார்.  ஆனால் விக்னேஷ் சிவனின் கதை அஜித்திற்கு திருப்திகரமானதாக இல்லாததால் இந்த திட்டத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.  லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதால் படத்தின் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

AK 62 அப்டேட் இன்னும் வராம இருக்க இதுதான் காரணம்... அஜித் இப்போ முடிவை  மாத்திட்டார்! | The AK62 update is not released yet... Ajith Is this the  reason for that - Tamil Filmibeat

மே 1-ம் தேதியன்று அஜித்தின் 52-வது பிறந்தநாளையொட்டி ‘ஏகே 62’ படத்தின் பட தலைப்புடன் கூடிய அதிகாரபூர்வ மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ‘ஏகே 62’ படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் ‘ஏகே 63’ படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடிகர் அஜித் ‘ஏகே 63’ படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.  இதுவரை அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தான் ‘ஏகே 63’ படத்தை இயக்குகிறார்.

ஏகே 62 படத்திற்கு முன்பே சூடு பிடிக்கும் அஜித்தின் ஏகே 63 படத்தின் பணிகள்!

மேலும் ‘ஏகே 63’ படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகர் அஜித் இணைவது இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைவது இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு முதல் தடவையல்ல, இதற்கு முன்னர் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா ‘அண்ணாத்தே’ படத்தை இயக்கினார்.  நடிகர் அஜித் பைக்கில் தனது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு ‘ஏகே 63’ படம் 2024-ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகும் என்று கூறப்படுகிறது.  சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து கங்குவா என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x