Saturday, May 25, 2024

ஒரு மாதத்திற்கு 60 GB டேட்டா! புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் அசத்தும் ஏர்டெல்!

by Talks Tamil
0 comment 290 views

ஏர்டெல் வழங்கும் இரண்டு ப்ரீபெய்டு திட்டங்களும் 50ஜிபி மற்றும் 60ஜிபி மொத்த டேட்டாவை கொண்டுள்ளதோடு ஒரு மாத காலம் வேலிடிட்டியுடன் வருகிறது.   

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இந்திய வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த இரண்டு புதிய திட்டங்களின் விலைகள் முறையே ரூ.489 மற்றும் ரூ.509 ஆகும், மேலும் இந்த இரண்டு திட்டங்களும் 50ஜிபி மற்றும் 60ஜிபி மொத்த டேட்டாவை கொண்டுள்ளதோடு ஒரு மாத காலம் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த ரூ.489 விலை மதிப்புள்ள ப்ரீபெய்டு திட்டமானது, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.  இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும், 50ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  ஒரு நாளைக்கான எஸ்எம்எஸ் வரம்பை நீங்கள் மீறிவிட்டால் ஒரு எஸ்எம்எஸ்-க்கு ரூ.1 வசூலிக்கப்படும் மற்றும் ஒரு நாளைக்கான டேட்டா வரம்பை மீறினால் 1 எம்பி டேட்டாவிற்கு 50 பைசா வசூலிக்கப்படும்

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x