Saturday, May 25, 2024

புதிய தொழிலை தொடங்கிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி- இதோ புகைப்படங்கள்

by Talks Tamil
0 comment 261 views

ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமா கொண்டாடும் பிரபலங்களில் ஒருவர் ஜி.வி. பிரகாஷ் குமார். ஏ.ஆர். ரகுமானின் உறவினர் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.

இசையமைப்பாளராக பல பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜி.வி. பிரகாஷ் நடிகராகவும் கலக்கி வருகிறார், ஆனால் நடிகராக அவர் இன்னும் சரியான ஹிட்டை பார்க்கவில்லை.

அண்மையில் அவருக்கு சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது, அனைவருமே அதற்காக அவருக்கு வாழ்த்து கூறினர்.

சைந்தவி புதிய தொழில்

ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது என்னவென்றால் சைந்தவி ஒரு புதிய தொழிலை தொடங்கியுள்ளார்.

சவுண்ட்ஸ் ரைட் என்ற பெயரில் ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். இந்த ஸ்டூடியோவின் திறப்பு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, சீன் ரோல்டன், ஸ்ரீநிவாஸ், ஹரி சரண், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x