Tuesday, May 21, 2024

ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடி சம்பளமா..அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா சரண்

by Talks Tamil
0 comment 273 views

Actress Shriya Saran Salary: நடிகை ஸ்ரேயா சரண் சம்பளமாக ரூ.1 கோடி கேட்டதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு நடிகை ஸ்ரேயா சரண் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய், தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, சிரஞ்சீவி மற்றும் அஜய் தேவ்கன் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் திரை இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து நடிப்புக்கு சிறிய இடைவெளி எடுத்த ஸ்ரேயா மீண்டும் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அதன்படி இந்தியில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின், கன்னடத்தில் வெளியான கப்ஸா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் கடந்த மாதம் வெளியானது. தற்போது இவர் பாப்பா ராவ் பிய்யாலா இயக்கத்தில் உருவாகி வரும் மியூசிக் ஸ்கூல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றில் ஐட்டம் சாங்க் பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஸ்ரேயாவை படக்குழு அணுகினர். இதற்கு இவர் ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர் ஷாக் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x