Wednesday, May 15, 2024

லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் விவரம்!

by Talks Tamil
0 comment 10 views

Rajinkanth Salary: ஜெய்லர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ரஜினி வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெய்லர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது.  நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்தது.

தற்போது ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் படம் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ரஜினியின் 171வது படமான இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த படத்திற்காக ரஜினிக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் செய்தி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும் இதுதான் ரஜினியின் சம்பளம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  இதன் மூலம் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் மாறியுள்ளார்.

அனிருத் இசையமைக்க உள்ள தலைவர் 171 படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், ரன்வீர் சிங் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. Tamilan Talks இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x