Tuesday, May 14, 2024

மொபைலில் கூகுளை ஓவர்டேக் செய்யும் சாட்ஜிபிடி..!

by Talks Tamil
0 comment 46 views

சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு மொபைல்களில் டீஃபால்ட் அசிஸ்டன்ட் ஆக செட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஒபன்-ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி.பி.டி. மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் உள்ளிட்டவை அதிக பிரபலமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே உள்ள செயற்கை நுண்ணறிவு சேவைகளான சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை பழையதாகிவிட்டன.

சமீபத்திய சாட்பாட்கள் மனிதர்களை போன்ற உரையாடல்களை மேற்கொண்டு அசத்துகின்றன. மேலும் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.

ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் உள்ள டீஃபால்ட் அசிஸ்டன்ட்களுக்கு மாற்றாக சாட்-ஜி.பி.டி. செயலி மாறி வருகிறது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களில் கூகுள் அசிஸ்டன்ட் சேவைக்கு மாற்றாக சாட்-ஜி.பி.டி. சேவை விரைவில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சாட்-ஜி.பி.டி. ஆண்ட்ராய்டு செயலியின் சமீபத்திய வெர்ஷனில் உள்ள கோட்-களில் இருந்து, இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனத்தில் டீஃபால்ட் அசிஸ்டன்ட் ஆக செட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட சாட்-ஜி.பி.டி. வெர்ஷன் 1.2023.352-இல் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய ஆக்டிவிட்டியில் ‘com.openai.voice.assistant.AssistantActivity’ இடம்பெற்றுள்ளது.

இந்த ஆக்டிவிட்டி தானாக டிசேபில் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை எனேபில் செய்ய முடியும். இதனை எனேபில் செய்ததும், திரையில் தற்போதைய சாட்-ஜி.பி.டி. அனிமேஷன் போன்றே காட்சியளிக்கும்.

இது மற்ற செயலிகளின் மேல் தோன்றும். அந்த வகையில், பயனர்கள் எந்த ஸ்கிரீனில் இருந்து கொண்டும் சாட்-ஜி.பி.டி.-யுடன் பேச முடியும்.

தற்போது சாட்-ஜி.பி.டி. சேவையை பயன்படுத்த பிரத்யேகமாக செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த சேவை டீஃபால்ட்-ஆக வரும் பட்சத்தில் பயனர்கள் தனியே செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

(இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. Tamilan Talks இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x