Sunday, April 14, 2024

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

by Talks Tamil
0 comment 269 views

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரிகோவைதிருப்பூர்தேனிதிண்டுக்கல், மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடுகிருஷ்ணகிரிதிருப்பத்தூர் மற்றும் தர்மபுரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்குமென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x