Thursday, April 18, 2024

7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி 38%லிருந்து 41% ஆக உயர வாய்ப்பா?

by Talks Tamil
0 comment 289 views

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில், 41% அகவிலைப்படி கிடைத்தால் அவர்களது சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.

ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமுறை அகவிலைப்படியை அதிகரிப்பதாகவும், அதன்மூலம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்றும் ஏஐசிபிஐ தரவுகள் தெரிவிக்கிறது.  தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஏஐசிபிஐ புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் குறியீட்டு எண்கள் 0.3 புள்ளிகள் அதிகரித்துள்ளது மற்றும் ஜூன் 2022 உடன் ஒப்பிடும்போது ஜூலையில் இந்த எண்ணிக்கை 0.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 1 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஏஐசிபிஐ குறியீடு கடந்த ஜூன் மாதத்தில் 129.2 ஆக இருந்தது, அதுவே ஜூலை மாதத்தில் 129.9 ஆக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில் 130.2 ஆக இருந்தது.  இப்போது 1 சதவீதம் உயரும்பட்சத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறியீடு 131.4 புள்ளிகள் வரை இருந்தால் 3 சதவீதம் அதிகரிக்கும்.  இதன்படி அகவிலைப்படி 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக 41% உயரும், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில், 41% அகவிலைப்படி கிடைத்தால் அவர்களது சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.  அகவிலைப்படி உயர்வின் மூலம் ஊழியர்கள் பெறப்போகும் சம்பளம் பற்றி இப்போது பார்ப்போம்.

ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ 56,900
அகவிலைப்படி இதுவரை (38%) – ரூ 21,622/மாதம்
புதிய அகவிலைப்படி (34%) – ரூ 23,329/மாதம்
அகவிலைப்படி அதிகரிப்பு 23,329-21,622 = ரூ 1,707/மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு :

ஊழியரின் அடிப்படை சம்பளம் – ரூ.18,000
அகவிலைப்படி இதுவரை (38%) – ரூ.6840/மாதம்
புதிய அகவிலைப்படி (41%) – ரூ 7,380/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி 7,380-6840 = ரூ 540/மாதம் அதிகரித்தது
ஆண்டு ஊதிய உயர்வு 540 X12 = ரூ 6480

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x