Monday, April 15, 2024

தமிழக மின்வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என ஆலோசனை

by Talks Tamil
0 comment 298 views

தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல் என ரூ.83 ஆயிரத்து 310 கோடி செலவு ஆகிறது. சென்னை: தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மின் கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் கட்டண உயர்வை எப்போது நடைமுறைப்படுத்து என ஆழ்ந்து சிந்திக்கின்றனர். இந்தியாவிலேயே, நகர மயமாக்கல் மிக அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாகவும் இருப்பதால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, தமிழக அரசு தற்போது பணிகள் நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயலாக்கத்திற்கு கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும் இப்போதுள்ள கடன் சுமை காரணமாக நிதி நெருக்கடி மேலும், மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல் என ரூ.83 ஆயிரத்து 310 கோடி செலவு ஆகிறது.

இதனால் இந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 213 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மின் வாரியம், 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து வருவதால் கடன் மட்டும் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. அதே நேரத்தில் கடந்த 8 வருடங்களாக செலவினங்களை ஈடுகட்டுவதற்கு மின் கட்டணம் மூலம் சமாளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x